செல்போனில்
நண்பனின் அப்பா.
கிராமத்து விவசாயி!
நேராக விஷயத்திற்கு வந்தார்.
"முடிஞ்சா நேர்ல ஒரு நடை வரச்சொல்லேன்.
இழுத்தார்.
"அம்மாவுக்கு மருந்துக்கு ரொம்ப செலவாயிருச்சு.
அறுவடைக்கு கையில காசு பத்தல."
இரவில் நண்பன் வந்ததும் சொன்னேன்.
farmville இல் மும்முரமாய்
விளைச்சல் அறுவடை
செய்தவாறே சொன்னான்.
"இப்போ பிஸியா இருக்கேன்
அப்புறமா வரேன்னு சொல்லிடு"
No comments:
Post a Comment