ஒரு மூலையில் மனிதர்
பசியில் வாடிச் சாக
வளர்ப்பு அல்சேஷன் தினம் தின்னும்
அரை கிலோ கறி ஒரு லிட்டர் பால்.
மேதகு மனித வாழ்வுக்கு
நாயே மேல்!
மழையிலும் வெய்யிலும் வாட்டி வதக்க
மலையும் மலை சார்ந்த மக்களும்
புகையும் புழுதியுமான
புறா கூட்டு பொருளாதாரத்துக்கு தடையாம்
துரத்து! துரத்து!
முன்னோரிட்ட வினை
கண்ணி விதைத்த கழனிகளில்
பயிராகுது கட்டை கால்கள்.
எரிவாயு, எண்ணெய்
கனிமங்கள் குடைந்தெடுக்க
உலகின் ஒரு கோடியிலிருந்து
ஓடி வந்து
படையெடுத்து அழிப்பார்
பல்லாயிரம் ஜனங்களை.
கேட்கப்படும் கேள்வி
ஒன்னே ஒன்னு
"எனக்கு எவ்வளவு?
No comments:
Post a Comment