சகல செல்வம் துறந்து
தொழில் மறந்து
பேசும் வழி அற்று
மணி ஓசையிடும்
வளைவாசல் நுழைவேன்.
இயேசு நாதராய் கைவிரித்து
சகலமும் துறந்தேனென
வான் பார்க்க,
தொட்டு தடவி
அடி முதல் முடி வரை
மேலேறும் நுண்புலன் பொறி.
கன நேர காத்திருப்பில்
'சக்' என அச்சிடலில்
நிறைவு பெரும்
Airport security check.
No comments:
Post a Comment