Monday, January 11, 2010

Poetry ::: January 1

ஜனவரி ஒன்னு
அதிகாலை
பாதி ஊரு
ஆடி அடங்குகையில்
மீதி ஊரு
விழித்து எழுது.

உறை பிரித்து
தரை பதித்து
துவங்குது ஒரு தீர்மானம்.

"தினம் காலையில் 4km வாக்கிங் போவேன்"

புத்தம் புது வெண்ணிற jogging shoe
லேபில் கிழிக்காத ரீபோக்
ipod wrist band சகிதம்
இள நிரை
சிறு தொந்தி வாலிபரும்
சில நிரை xxl அம்மையாரும்
வியர்வை மினு மினுக்க
அகிலம் அதிர அதிர
வேண்டிப் பெற்ற வசதியில் வளர்த்த
வேண்டாத எக்ஸ்ட்ரா கிலோக்கள்
கரைக்கிறார், கரைக்கிறார்.
நடையாய் நடந்து.

கரைந்ததோ
வைராக்கியம்
ஜனவரி பத்தில்
பாதி கூட்டம் காணோம்!