Wednesday, February 04, 2015

அவள்

அவளைப் போலவே
இருக்கிறாள்.

பார்வை கொஞ்சம்...
சிரிப்பு  கொஞ்சம்...
கொஞ்சம் ஸ்டைலும் ...
குரலும் கூட ஓரளவு?
அவளைப் போலவே
இருக்கிறாள்.
புன்னகைக்கிறாள்.

விதியின் சுழலில்
இற்றுப்போய்
புகை போலும்
நினைவுகள்...

அவள் காலத்திய,
அவளால்
அடையாளம் அடைந்த
உணர்வுகள் மட்டும்
மீண்டும்
மறு ஜென்மம்
எடுக்கின்றன.
அன்றுள்ளவை
போலவே  
புத்தம் புதிதாய் ..

உணர்வுகள்
பனி போல மெதுவே
சூழ்கிறது -
அரை சதவீத
சோகத்தையும்
சேர்த்துக் கொண்டு..

காலத்தில் பின்னே
செல்ல விழையும் நேரம்,
ஏதோ கேட்கிறாள்.
Sir?!

இது 2015, February!.
நானும்  அவன் இல்லை.
Sorry. i  was lost.
இவள் புன்னகைக்கிறாள்.