அயல் தேசத்து Senior citizen நண்பர் ஒருவர்.
எனது கை பேசி directory இல் சேமிக்கப்பட்டு உள்ளார். இந்தியா வரும் போது சந்திதுள்ளோம்.
ஆனால், தொடர்பு கொண்டு பல வருடம் ஆயிற்று.
திடீர் என ரக ரக மாய் WhatsApp ஸ்டேட்டஸ் மெசேஜ் கள். எதிலும் அவர் படமோ, வேறு புகைப்படங்கள் எதுவும் இல்லை. போஸ்ட் கள் வைத்துப் பார்க்கும் போது
வயது இருபதுக்கும் கீழ் இருக்கலாம். பெண்.( I appa , பூக்கள் என்று பல வித status messages.)
Message செய்பவர் அவருடைய குடும்பத்தினர் ஒருவரா? மகள் அல்லது பேத்தி மாதிரி?
அப்போ அவருக்கு என்ன ஆச்சு? நம்பர் மாற்றி விட்டாரோ?
அல்லது.. அவருக்கு எதாச்சும் ஆயிற்றோ?.. ,
நம்பருக்கு டயல் செய்து கேட்கவும் தயக்கம். ஒரு வேளை கெட்ட செய்தி எதுவும் கேட்க நேர்ந்தால்.
(அது சரி. இன்னமும் டயல் என்று ஏன் சொல்கிறோம்? அந்த மாதிரி டயல் போன்கள் போன நூற்றாண்டின் இறுதியிலேயே காலாவதி ஆகிவிட்டதே.இன்னமும் டிஜிட்டல் யுகத்தில் போன நூற்றாண்டின் குறியீட்டு எச்சங்கள் , save கு floppy disk symbol போல)
ரொம்பத்தான் யோசிக்கிறேன்?
ஒரு வேளை அவருக்கு இளமை திரும்பி இருபதுக்கு போய் இருந்தால்?எதோ metaverse ஆமே? நமக்கு வேண்டிய உருவம், பால், இனம் என்று எப்படி வேணாலும் அந்த மெட்டா உலகத்தில் இருக்கலாமாம்.
அதுவும் whatsapp இல் தான் படிச்சேன்.
திரிசங்கு சொர்க்கம் மாதிரி கற்பனை சக்தியின் எல்லையால் வடிவமைக்கப்பட்ட ஒரு மனோ தேசம். எனது கற்பனையும், உனது கற்பனையும், நமது கற்பனையும் சேர்ந்து சங்கமிக்கும் மனோ வெளி.
மெலிதாக புன்னகைத்தேன்.
ஆமாம். ரொம்பத்தான் யோசிக்கிறேன்!