Tuesday, June 15, 2010

குரங்கு கை சிரங்கு

கருத்த பழம் .. (literal translation of Black Berry in Tamil)..

That is the title i thought of keeping for this.Then i realised there is a big business for QWERTY business phones out here. From Nokia (thatz ma fav) to Black Cherry - there will be lot of others, who will protest through tweets to twangs. So, changing the title to குரங்கு கை சிரங்கு.. excusez-moi. This post is about the travails of a guy who upgraded to a business phone recently... And this blog gonna be a multilingual one like Kites - the Box Office Bomb. Who expects a blog to be blockbuster? chalega re! Am doing justice by giving an English version of this post. very soon

It was more of a work based necessity that I needed to upgrade myself from a simple hai-hullo-bolnewala phone to a business phone. Am sharing my experience and observations, in the process of buying one.

குரங்கு கை சிரங்கு

ஹய் டெக் நண்பர்களுக்கு சிலருக்கு ஒரு வினோத வியாதி. ரெண்டு மாதத்திற்கு ஒரு தடவை, மார்கெட்டில் என்ன மொபைல் புதிதாய் வந்திருக்கிறதோ, அதை உடனடியாக வாங்க வேண்டிய கட்டாயம். அரிப்பு.
இணையத்தில் மொபைல் மார்க்கெட் வரும் முன்னரே, அதை பற்றிய ஆதி முதல் அந்தம் வரை தெரிந்து, அது குறித்து வலைப்பதிவுகளை அலசி, பிரித்து மேய்ந்து, ஒரு நடமாடும் களஞ்சியமாகவே இருப்பர்.
இதை மாதிரியான ரெண்டு ஜீவன்கள், நேரில் சந்தித்தால் இலக்கியத்தில் ரெண்டு புலவர்கள் நேரில் சந்தித்த அனுபவம் பற்றிய பாடல் போல இருக்கும். இலக்கியம் பற்றிய பற்றில்லாதவர்களுக்காக இது: இருவரும் புளகாகிதம் உற்று, பேருவகை அடைந்து, ஒரு வித பரவச நிலையில் இருப்பர் - இருவரில் யாராவது ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வந்து கலைக்கும் வரை.

இந்த மாதிரி ஆசாமிகளுக்காகவே, எக்ஸ்சேஞ் ஆபர் கொடுத்து (கெடுக்கும்) வைக்கும் அலைபேசி கடைகள் ஏராளம்.

கடையில் கேட்பாரோ? புதுசா கருத்த பழம் - சுட்ட பழம் வேணுமா, சுடாத பழம் வேணுமா?

காட்சி 1: பின்னிரவு காட்சி முடிந்து வரும் போது, சாலையின் சிக்னலில், நெடு நாள் கழித்து நண்பன் ஒருவனைக் கண்டேன். தலை கவிழ்த்து, உள்ளங்கையில் உற்று நோக்கியவாறு, அதி தீவிர சிந்தனையில்... சூழ்நிலையின் பிரக்ஞை அற்று இருந்தான். என்ன ஆயிற்று நண்பனுக்கு? விசாரித்ததில், கருத்த பழத்தில் அலுவலக மெயில் பார்த்திட்டு இருந்தானாம். நள்ளிரவில்! அலுவலகம் இருபத்தி நாலு மணிநேரமும் துரத்துகிறது.

காட்சி 2 : pizza hut . ஞாயிறு மதியம் ஒரு மணி. கணவன் மனைவி. இருவரும் எதிர் எதிரே. மேல் தட்டு உழைப்பாளிகள். ஏறக்குறைய அரை மணி நேரம் இருந்தனர். பேசிய வார்த்தைகள் இரண்டு வரிகளில் அடங்கி விடும்.
something like, "இதை ஆர்டர் பண்ணட்டுமா?" "சரி பண்ணிடுங்க". மீதி நேரம், தலை கவிழ்த்து இருவரும் தங்கள் கருத்த பழத்தின் டிராக் பந்தை உருட்டிக்கொண்டு. அஞ்சல் அனுப்பிக் கொண்டு.

காட்சி 3 : பெரும்பான்மை அலுவலகத்தில் இந்த காட்சியைக் காணலாம். meeting request வந்திருக்கும். துறைத் தலைவருடன் ஒரு ஐந்து நிமிட சிறு நேர்காணல். நேரில் போனால், james bond பட வில்லன் போல முதுகு காட்டி உட்கார்ந்திருப்பார். இல்லை, மடி கணினியில் தலை புதைத்து அமர்ந்திருப்பார். கேள்விகள் மட்டும் டாண் டாண் என்று வரும். பதிலளித்துக்கொண்டிருக்கும் போதே, கருத்த பழம் உருட்டி கொண்டிருப்பார். ஒரு சிறு சாரி சொல்லி அலை பேசியையும் பதில் அளிப்பார். parallel processing at its extreme ! வடிவேலு மாதிரி "என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே" என்று சொல்லத் தோன்றும்.

கருத்த பழம் தயாரிப்பாளருக்கு சில யோசனைகள்:

* டிராக் பந்தில் ஒரு உருத்திராட்சக் கொட்டையை வைக்கவும். கரும யோகத்தில், கண்ணாயிருக்கும் போது கொஞ்சம் புண்ணியமும் சேர்த்துக்கொள்கிறோம்.
* குட்டித் திரையில் கண்கள் இடுக்கி கொண்டு, அஞ்சல் பார்த்து பார்த்து, தூரப்பார்வை விரைவில் வந்து சேரப்போகிறது. அப்போது, கண் கண்ணாடிக்கான விசேஷ சலுகை தரலாம்.
* கண் கண்ணாடி உள்ளேயே அஞ்சல் படிக்கும் வசதி செய்து தரலாம். போர் விமானிகள் HUD ( head up display ) உபயோகிப்பது போலவே, அஞ்சல் படித்துக் கொள்கிறோம். குறைந்தது கழுத்து வலியாவது மிஞ்சும். டிஸ்ப்ளே டெக்னாலஜி முன்னேறி வரும் வேகத்தில், இது விரைவில் சாத்தியமே என்று தோன்றுகிறது.

இவ்வளவு காட்சியையும் சொல்லி விட்டு நானும் same side goal போட்டு விட்டேன்.

மனைவியிடமிருந்து "காலங்கார்த்தாலே பல்லு கூட தேய்க்காம, என்னத்த போன்ல பார்த்திட்டு இருக்கீங்களோ. புது போனே வந்தாலும் வந்துது, என்ன ஏதுன்னு ஏறெடுத்து கூட பேச மாட்டேங்கிறீங்க..." என்று பாட்டு வாங்கும் போதுதான் தெரிந்தது, எனக்கும் குரங்கு கை சிரங்கு வியாதி வந்ததென்று.

2 comments:

  1. ட்ராக் பந்துக்கு பதிலாக உருத்ராக்ஷம் வைத்து புண்ணியம் தேடும் ஐடியா நன்றாகத்தான் இருக்கிறது.... ஆனாலும் சில சந்தேகங்கள்...

    ட்ராக் பேட் இருக்கும் மாடல்களில் என்ன செய்வது?

    ஆபீஸ் மெயில் பார்த்து கர்ம யோகம் செய்யாமல் வலையில் இருக்கும் அம். கு. படங்களைப் பார்த்து கருமாந்திர யோகம் செய்தால் மிகுந்த பாபம் நேருமே?

    ReplyDelete
  2. அய்யா உருத்திரா.. கை பேசியின் குட்டித் திரையில் அம்.கு. படம் பார்க்கும் அளவுக்கு காய்ந்தது போய் இருப்பதே பெரிய பாபம் அல்லவா?

    ReplyDelete