அதிர்வாணத்தில்
வாகனங்கள் கதறும்
நாய் பூனை புறா காகங்கள்
படபடத்து பயத்தில் பதுங்கும்
ஒவ்வொரு வெடிச்சிதரளும்
உடல்நலம் குன்றியவர்
இருதயம், காது ஜவ்வு
பிழிந்து வலி எடுக்கும்.
ஆஸ்துமா நோயுற்றவர்
கழுத்து நெரித்து
உயிர் திருகும்
யாரும் வேண்டாத வெடிப்புகை.
காலடியில் திடுமென
வெடித்துப் பதற
வைத்தவன்
வைதவனைப் பார்த்து சிரிக்கிறான்.
குடியும் 'குடி'தனமுமாய்
நரகாசுரர் கூட்டம் நடுவே..
தீப ஒளி எங்கே - அகமும் புறமும்?
கிருஷ்ணா நீ பேகனே வாராயோ ?
Friday, November 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment