புரிதல்
கதவு கல கலத்தது, சிரித்தது.
ஒருக்களித்த வாசல் கதவில்
வளை ஒலி.
சீலையிட்ட ஜன்னல் சொல்லியது
"இல்லை. வேறு வீடு பார்."
வெய்யில் கண்ணாடி உரையிட்ட கார் கதவின்
முன் கை ஏந்தலுக்கு மகா மௌனம் பதிலாக.
குட்டி திரையில் குறுஞ்செய்தியில்
தினத்தின் தலை எழுத்து
மாற்றும் அவசர உத்தரவுகள்..
கணினி ஜன்னல்களில் வயிற்றுப்பிழைப்பு.
வீடு திரும்பினால்
கார்டூன்களாய் திரை முன்னால்
கரையும் குழந்தை பிராயம் ..
இவ்விடம் முகம் பார்த்தும்
மனம் புரிவதில்லை
நாளின் இறுதியில்
வளைவுகளுடன்
விசும்பும் போர்வை -
அரை குறை புரிதலின், இயலாமை.
No comments:
Post a Comment