Friday, June 01, 2012

Nidharsanam

நின்ற இடம்
நடந்த இடம்
உலகம் மறந்து
சிரித்திருந்த இடம்.

இன்று
உலகம் மட்டும்
சிரிக்கிறது.

நான் தனியே நடக்கிறேன்
துக்கத்தை துணையாய் கொண்டு.

எங்கு காணினும் உன் முகம்
குரல், வாசம் அருகாமை.

நிதர்சனம் முகத்தில் அறைகிறது
நீ இல்லை என்று.

தொண்டை அடைத்து
நெஞ்சில் வலித்தாலும்
ஓட்ட வைத்த புன்னகையுடன்
உன் நினைவுகள் ஏந்துவேன்.

குழந்தையைப்
தோளில் போட்டுத் தாலாட்டி
தூங்கப் பண்ணுவது போல்
மெதுவே மெதுவே
என் துக்கம் துறப்பேன்.

உன்னையும் மறப்பேன்.


நிதர்சனம்
மறுபடியும்
முகத்தில் அறைகிறது.
 -- விஷ்வா (2003-04)

No comments:

Post a Comment