பழக்கம்
மறப்பேன் என சூளுரைத்து
கால் சுற்றிய பாம்பை
கட்டவிழ்க்க
தவித்துப் புலம்பி
நித்தம் நிதம்
போராடிப் போராடி
திடும் என ஒரு நாள்
எந்த முயற்சியும் இல்லாதது போல்
முடிச்சு அவிழ்ந்தது.
பாம்பும் நகர்ந்தது.
பல நாள் நிம்மதியின்பின்
அயர்ந்து உறங்கும்
ஓர் இரவின் அதிகாலைக் கனவில்
கிளர்ந்தெழுந்து
பழக்க உருவில் படம் எடுத்தது
ஞாபக நாகம்.
சிவ சிவா என
பரம சிவனைப் பார்த்தால்
பரம சிவன் கழுத்திலும் நாகம்!
Background:
Snakes are used as a metaphor for recurring thought patterns.
மறப்பேன் என சூளுரைத்து
கால் சுற்றிய பாம்பை
கட்டவிழ்க்க
தவித்துப் புலம்பி
நித்தம் நிதம்
போராடிப் போராடி
திடும் என ஒரு நாள்
எந்த முயற்சியும் இல்லாதது போல்
முடிச்சு அவிழ்ந்தது.
பாம்பும் நகர்ந்தது.
பல நாள் நிம்மதியின்பின்
அயர்ந்து உறங்கும்
ஓர் இரவின் அதிகாலைக் கனவில்
கிளர்ந்தெழுந்து
பழக்க உருவில் படம் எடுத்தது
ஞாபக நாகம்.
சிவ சிவா என
பரம சிவனைப் பார்த்தால்
பரம சிவன் கழுத்திலும் நாகம்!
Background:
Snakes are used as a metaphor for recurring thought patterns.
No comments:
Post a Comment