அடுக்கு மாடி குடியிருப்பு
தாழிட்ட கதவு
திரைச் சீலையிட்டு
மூடி வைத்த ஜன்னல்கள்
world class premium
அடுக்கு மாடி குடியிருப்பு.
மூடி வைத்த வாழ்க்கையின்
புழுக்கத்தில் அழும் குழந்தைகள்.
வெய்யில் காயவும்
தென்றலுக்காகவும்.
குடியிருப்பில் குழந்தைகள்
விழி விரிய,
பயமூட்டி, பயம் காட்டி
பூச்சாண்டி கதை பல சொல்லி வளர்க்கின்றார்.
ஆயினும் குழந்தைகள் சொல்லித் தராது கற்றவை
அடுத்த வீட்டு ஆதிசேஷனை நம்பாதே
அயல் நாட்டு ஆடோமேஷனை மட்டும் நம்பு.
சப்பை மூக்கு மனிதருக்கு சப்பை மூக்கு நாயே மேல்.
ஆதரிக்க அயலாரின்றி
அனாதையாய்
அமெரிக்கன் மகள் /மகன் வரும் வரை
ஐஸ் போட்டியில் காத்திருக்கிறார்
என பத்திரிக்கைகள் எழுதும்.
ஆனாலும் என்ன?
அடுத்த உலகத்திற்கு
நான் கொண்டு செல்வேன்
எல்லாமும், காதற்ற ஊசியும்*
என எண்ணி எண்ணி
அடுக்கி வைக்கிறார்
ஏராளமான செல்வம்.
வாசலில் புன்னகையுடன்
காத்திருப்போர்
குழந்தைகளுக்காக கடவுளும்
பெரியவர்களுக்காக யமனும்.
No comments:
Post a Comment