மாநகர எருமைகள்
இயர்போனால் காதடைத்து
புறச்சூழல் பிரக்ஞை அற்று
முற்றும் துறந்தவை போல்
மோன நிலையில்
தலையாட்டலுடன்
மாநகர எருமை
அதும்போக்கில்
தெருவை அடைத்துக்
கடக்குது ..
தலை தொங்கப்போட்டு
செல்போன் திரையில்
விரல் விளையாட்டு
நடுத்தெருவொ,
விரைவு ரயிலடியோ ..
மாநகர எருமைகளுக்கு
சமூக வலைதளங்களில்
அடுத்த கணம்
உலகம்
முடியும் முன்
லைக்கும் ஷாரும்
வாங்கணும் ..
விரையும் வாகனங்கள்
விலகிச் செல்லும்
வசை மொழிகள்
ஆரன் வழியே
வழிய விட்டு ..
மாநகர எருமைகளே!
கூகிள் கிளாஸ் ஒன்று
வருதாம் .
மேற் குத்திய விழிகளுடன்
ok google என்றியம்பி
இரு கால் எருமைகள்
தலைகுப்புற விழும் முன் ..
அய்யா கூகுளே !
சற்றே அவதானியுங்கள்.
உடைந்த முன்பல்லும்
நசுங்கிய பிட்டமுடன்
எருமைகள் அவதரிக்கும் முன்
சாலை கடக்கும் app
ஒன்றும்
விரைவில் கொண்டு வாரும் ..
இயர்போனால் காதடைத்து
புறச்சூழல் பிரக்ஞை அற்று
முற்றும் துறந்தவை போல்
மோன நிலையில்
தலையாட்டலுடன்
மாநகர எருமை
அதும்போக்கில்
தெருவை அடைத்துக்
கடக்குது ..
தலை தொங்கப்போட்டு
செல்போன் திரையில்
விரல் விளையாட்டு
நடுத்தெருவொ,
விரைவு ரயிலடியோ ..
மாநகர எருமைகளுக்கு
சமூக வலைதளங்களில்
அடுத்த கணம்
உலகம்
முடியும் முன்
லைக்கும் ஷாரும்
வாங்கணும் ..
விரையும் வாகனங்கள்
விலகிச் செல்லும்
வசை மொழிகள்
ஆரன் வழியே
வழிய விட்டு ..
மாநகர எருமைகளே!
கூகிள் கிளாஸ் ஒன்று
வருதாம் .
மேற் குத்திய விழிகளுடன்
ok google என்றியம்பி
இரு கால் எருமைகள்
தலைகுப்புற விழும் முன் ..
அய்யா கூகுளே !
சற்றே அவதானியுங்கள்.
உடைந்த முன்பல்லும்
நசுங்கிய பிட்டமுடன்
எருமைகள் அவதரிக்கும் முன்
சாலை கடக்கும் app
ஒன்றும்
விரைவில் கொண்டு வாரும் ..
No comments:
Post a Comment