Sunday, July 05, 2015

ஆரண்ய கண்டம்

சதா சலசல
இரைச்சலால்
நிறைந்த கானகத்தில்
இருள் சூழும்
ஒரு மாலைப்பொழுதில்
மின்னல் என
தோன்றி
மறைந்தது
ஒரு சொர்ணமான் .

ஆசையில்
அலைக்கழியும்
ஜானகியும்,
மானின் பின்
ஓடத் தயாராய்
ராமனும்
 லட்சுமணன் இல்லாத
வனத்தில்
ராவணரும்
காத்திருக்கிறார்.

fallen angel

ஓராயிரம் கண்கள்
ஈராயிரம் பார்வை
கருப்பும் வெளுப்பும்
இடையே கோடி
சாம்பல்களுமாய் ..

சுய உருவமும்
குணமும் அற்று
தொடுவன அனைத்தும்
பற்றிக்கொண்டு
எங்கும் நில்லாது
சதா அலையும்
ஒரு உயிர்க் கூடு.
எவன்டா இவன்?

வெளியே
இவ்விதம் இருக்க
அவன்
மறந்த தென்னவோ
மூவுலகங்களையும்
இமைக்காது விழிக்கும்
ஒரே பார்வையுடைய
தேவன்,
இந்திரன்.