Sunday, March 28, 2010

நினைவுகளாய் காலம்..

நினைவுகளாய் காலம்..
வலியில் விழிக்கிறேன்
கண்ணீர் கழுவிச் செல்கிறது
கலந்த காலம்
கடந்த காலம்.

கனவு பட்டங்களில் பறக்கிறேன் -
நூலேணி நினைவுகள் நீளத்திற்கு.
கண்கள் பழகாத உயரத்திற்கு

விரையும் மேகங்கள்
சொல்லிச் செல்லும்
வருவது சுழல்காற்றுடன்
அடைமழை.

நூலேணி நினைவுகள்
நீள நீள
கனவு பட்டம்
தொட விழையும்
கருவானில்
ஒரு வானவில்.
-- விஷ்வேஷ்வரன்

No comments:

Post a Comment