விதி தூக்கி சென்றது
கனவில் எட்டாத உயரம்
ஆரம்ப கிறுகிறுப்பு பழகி
உயரம் உணரா உயரம்...
நான் ஒரு திகழும் நட்சத்திரம்
என்னைச் சுற்றும்
எனக்கு திகட்டி தவிர்க்கும்
விண்மீன் கூட்டம்.
நான் ஒரு நிகழ்கால அதிசயம்
தலை அசைப்பில் ஆயிரம் நிகழும்
பயம் மரியாதை எல்லாம்
என்னை கணிக்கதவரை
நான் கவனிக்காதவரை
சொல்லாத ஒரு வார்த்தைக்காக
சாலையில் என்னைப் பார்ப்பவர்
விழி விரியும்
இதயம் எகிறும்
பார்த்தவருக்கே பரவசம்
ஆண்டவனே என்பவரும் உண்டு.
சதா
வெளிச்சத்திற்கு மத்தியில்
ப்ரோடோகோல் போர்வையுள்
ஓடோடி நானும் தேடுகிறேன்
விடுதலையின் வழி
விடு தளையின் வழி
என்னுள் அகழ்கிறேன்
நான் வந்த காரணம்.
பொய்மை துறந்து
புறம் அவிழ்த்து
தவிப்பிர்க்கொரு தீர்ப்பு தேடி
நிர்வாணநா(யா)ய் அலைவேன்,
ஆர் கண்ணில் படாது
ஆயிரம் காதங்களுக்கப்பால்
புகழின் புழுக்கத்தில்
மறைந்து போனதென் நிர்வாணம்.
அறிவேன் நான்
விளக்கு விலக்கி
வேகமாய் ஓடும்
ஒரு வினோத விட்டில்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment