Sunday, August 07, 2016

memoirs

பெட்டி  திறக்கிறேன்.
பழைய புகைப்படங்கள்
இன்றும் புதிது போல்.

நினைவுகள்
பலதும் புகைபடிந்ததுபோல்.
 சிலவோ
படம் எடுப்பதற்கு
முன்னும் பின்னுமான
நிகழ்ச்சிகள் பளிச்சென
டிஜிட்டல் தரத்தில்

மாற்றங்கள் ஏராளம்
நண்பர் பலரும்
தலை முடி கொட்டி, நரைத்து
தொப்பை வளர்த்து குண்டடித்து

பலரும் உலகெங்கும் திரவியம் தேட
வெகு சிலர் பூவுலகும்  விட்டகர்ந்து

பழய படங்கள் வயதேற  ஏற  பொக்கிஷம்.

கடந்து வந்த பாதை
மறந்து போன பாதை
மறந்து போல பலர்
நெக்கி நெம்பி நினைவூட்ட
என மூழ்கிப்போகிறேன்.

அதிரடி
அவசர உலகில் இங்கு
ஆயிரம் சோலி  உண்டு

நினைவுகளுடன்
புகைப்படங்களையும்
மூடுகிறேன்.

மற்றும் ஒரு நாள்
மற்றும் ஒரு நேரம்
அமையும்.
புகைப்படங்களில்
யாரும் மாறுவதில்லை.

மிச்சாமி துக்கதம்.

இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment